தமிழ்நாடு

பசுமை நிதியத்திற்கு 100 கோடி ரூபாய் ஓதுக்கீடு செய்தது தமிழக அரசு...!

Tamil Selvi Selvakumar

பருவநிலை மாற்றத்திற்கான பசுமை நிதியத்திற்கு தமிழக அரசு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

நிதி ஒதுக்கிய தமிழக அரசு:

காலநிலை மாற்றங்களை பசுமையாக்கும் முயற்சிக்கு 1000 கோடி ரூபாய் மதிப்பிட்டில் நிதி உருவாக்க அரசாணை வெளியிட்டு, அதற்கு முதற்கட்டமாக, தமிழக அரசு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

தொடர்ந்து, நீர் பாசன வளங்களை மேம்படுத்துதல்,  கரைகளைப் பாதுகாத்தல், பேரிழப்பு மற்றும் இடர்களை நிர்வாகித்தல்,  நுண்ணிய பிளாஸ்டிக் மதிப்பீடு செய்தல், மின்சார வாகனங்களை ஊக்குவித்தல், இயற்கை எரிவாயு பயன்பாடு உள்ளிட்ட பணிகளுக்கு இந்த பசுமை நிதியம் மூலம் செலவிடப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.