தமிழ்நாடு

நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை...!

Tamil Selvi Selvakumar

சென்னை நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. 

சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மெய்யநாதன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். 

அவரது சிலைக்கும் அதற்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவ புகைப்படத்திற்கும் பொதுமக்கள் பலரும் மாலை அணிவித்து மலர்களை தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். இதனால் இந்த பகுதி முழுவதும் 250 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு இப்பகுதியில் சற்று சலசலப்பு ஏற்பட்டதால் இந்த ஆண்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தடுப்புகள் அமைத்து தொடர் பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.