தமிழ்நாடு

“வடிகால் பணிகளை அரசு விரைந்து முடித்திடுக” - ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

Malaimurasu Seithigal TV

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கிடப்பில் போடப்பட்ட வடிகால் பணிகளால் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம்  அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்லாவரம், பொழிச்சலூர் உள்ளிட்ட பலப் பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்ற நிலையில், இதற்காக தூர்வாரப்பட்ட பள்ளங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

எனவே வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன் தமிழ்நாடு அரசு கிடப்பில் போடப்பட்டுள்ள வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.