வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறைந்த நிலையில் தற்போது வட உள் தமிழகம் மற்றும் அதன் ஒட்டிய பகுதிகள் மற்றும் கேரள கடற்கரை ஒட்டிய அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சியாக நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை முதல் படிப்படியாக தமிழகத்தில் மழையின் தீவிரம் குறைந்து வரும் எனவும் 15 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வருகின்ற 16 ஆம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : உலகில் இந்தியாவின் மதிப்பு உயருகிறது?!!