தமிழ்நாடு

அழகு கலை பயிற்சி பள்ளியின் பட்டமளிப்பு விழா - ராம்ப்வாக் செய்து அசத்திய பெண்கள், குழந்தைகள், திருநங்கைகள்

திருச்சியில் அழகு கலைப் பயிற்சி பள்ளியின் பட்டமளிப்பு விழாவில், பயிற்சி முடித்த 30க்கும் மேற்பட்டோருக்கு பட்டங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டன. 

Malaimurasu Seithigal TV

திருச்சி மாவட்டம் ராமலிங்க நகரில், லிம்ராஸ் அகாடமி அழகுக் கலைப் பயிற்சி இன்ஸ்டியூட் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் 27-வது  பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. அழகுக் கலை பயிற்சி பள்ளியின் நிறுவனர் பர்சானா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பயிற்சி முடித்த 30 பேர் அழகுக் கலை, சிகை  அலங்காரம் போன்றவற்றிற்கு பட்டம் பெற்றனர்.

இதில் ரோட்டரி சங்கம் உதவியுடன், 3 திருநங்கைகள் பயிற்சி பெற்று பட்டம் பெற்றனர். இதனைத் தொடர்ந்து, ராம்ப்வாக் எனப்படும் பேஷன் ஷோ நடைபெற்றது. இதில், பெண்கள், குழந்தைகள், திருநங்கைகள் கலந்து கொண்டு, ஆடை, ஆபரணங்கள் அணிந்து, ராம்ப்வாக் செய்து பார்வையாளர்களை அசத்தினர்.