தமிழ்நாடு

காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

தமிழகத்தில் காவலர்கள் உடல்நிலையை கருத்தில் கொண்டு, காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Malaimurasu Seithigal TV

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தில், காவலர்கள் தங்கள் உடல் நலனை பேணிக்காத்திட ஏதுவாகவும், குடும்பத்துடன் போதிய நேரம் செலவிடவும், காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இந்த அறிவிப்பு தொடர்பாக இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், இரண்டாம் நிலை காவலர்கள் முதல் தலைமை காவலர்கள் வரையிலான  அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இந்த அறிவிப்பு காவல் பணியில் இடையறாது ஈடுபட்டு சவாலான பணிகளை எதிர்கொள்ளும் காவலர்களுக்கு அருமருந்தாக விளங்குவதோடு, புத்துணர்ச்சியோடும், உற்சாகத்தோடும் பணியை மேற்கொள்ள வழிவகுக்கும் என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்..