தமிழ்நாடு

இனி உடற்பயிற்சி கூடங்கள் தொடங்க காவல் துறை அனுமதி தேவையில்லை...!

Tamil Selvi Selvakumar

உடற்பயிற்சி கூடங்கள் தொடங்க காவல்துறை அனுமதி தேவையில்லை என்ற சட்ட முன்வடிவை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். 

பொதுமக்களின் உடல் நலம் மற்றும் நல வாழ்வை கருத்தில் கொண்டு, உடற்பயிற்சி கூடங்கள் தொடங்குவதற்கான நடைமுறைகள் எளிமை படுத்தப்படும் என்றும், உரிமம் பெறுவது எளிமையாக்கப்படும் எனவும் கடந்த ஆண்டு திருச்சியில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் தெரிவித்தார்.

அந்த அறிவிப்புக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், 1888-ம் ஆண்டு சென்னை மாநகர காவல் சட்டத்தை திருத்தம் செய்வதென தமிழக அரசால் முடிவு செய்யப்பட்டு, திருத்தம் கொண்டுவரப்பட்டது. இது தொடர்பாக, சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.