தமிழ்நாடு

எச்.ராஜாவின் வயதுக்கு அரசியல் அனுபவத்திற்கும் கூட மரியாதை கிடையாதா? அமைச்சர் மீது திரௌபதி இயக்குனர் காட்டம்.! 

Malaimurasu Seithigal TV

எச்.ராஜாவின் வயதுக்கு மதிப்பில்லையா? என்றும் அவரது வயதுக்கு மரியாதை கொடுக்கவேண்டும் என்றும் திரௌபதி இயக்குனர் மோகன் ஜி கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் இருக்கும் ஹிந்து கோவில்களை அரசிடமிருந்து மீட்க வேண்டும் என ஈஷா ஜக்கி வாசுதேவ் கூறியிருந்தார். அவரின் இந்த கருத்துக்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடுமையான சிலர் கருத்துக்களை முன்வைத்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா ஹிந்து சந்நியாசிகளை பற்றி பேசுபவர்களின் பின்னணி குறித்து நோண்டப்படும் என கூறினார்.


அதன்பின் மதுரையில் கொரோனா பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் எச்.ராஜாவின் இந்த கருத்து பற்றி செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு வெறி புடிச்ச நாய் குரைக்கிறதுக்கு எல்லாம் நீங்கள் என்னிடம் வந்து கேள்வி கேட்கிறீர்கள், இந்த மாதிரி நாய் குரைப்பதற்கு எல்லாம் நான் பதில் சொல்வது இல்லை என காட்டமாக கூறிவிட்டு சென்றார். எச். ராஜா மற்றும் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரின் இந்த கருத்துக்கள் தமிழகம் முழுக்க கடும் சர்ச்சையை ஏற்படுத்தின. 

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள திரௌபதி இயக்குனர் மோகன் ஜி "திரு எச். ராஜாஅவர்களை இவ்வளவு மதிப்பு குறைவாக விமர்சனம் செய்வது நாகரிக அரசியலா.. வயதிற்கும், அரசியல் அனுபவத்திற்கும் கூட மரியாதை கிடையாதா.. கருத்துரிமை என்பது இங்கு இல்லையா.. கோவில்களை பாதுகாப்பதற்கு குரல் கொடுப்பவர்களுக்கு இதுதான் இங்கு கிடைக்கும் மரியாதையா" என கேள்வி எழுப்பியுள்ளார். அவரின் இந்த பதிவு இணையதளத்தில் பேசும் பொருளாகியுள்ளது.