தமிழ்நாடு

எங்கள் சாதியை அவதூறாகப் பேசுகிறார்..டிக்டாக் ரவுடிபேபி சூர்யா மீது மேலும் ஒரு வழக்கு.! 

Malaimurasu Seithigal TV

டிக்டாக் மூலம் பிரபலமான ரவுடிபேபி சூர்யா நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

குறிஞ்சியர் மக்கள் சனநாயக இயக்கத்தின் சார்பாக அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் விடுதலை நேயன் ரவுடிபேபி சூர்யா மீது மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

அவர் அளித்த புகாரில், ரவுடி பேபி சூர்யா என்கிறவர் பொது சமூக வலைதளங்களில் ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரைச் சொல்லி அவதூறாக தொடர்ந்து பேசிவருகிறார். எங்களின் சாதிப்பெயரை சொல்லி பொது சமூக வலைத்தளத்தில் எங்களை அவமானம் செய்துள்ளதால் பொதுவெளியில் எங்கள் சாதி மக்கள் மீது தவறான பார்வையும் சாதிரீதியான கேளிக்கை பார்வையும் ஏற்பட்டு வருகிறது 

அதனால் நான் ஒரு சிலரால் கேலிக்கும் உள்ளானேன். அதனால் 'சூர்யா ரவுடிபேபி 22' என்கிற யூடியூப் சேனலை தடை செய்தும் ரவுடி பேபி சூர்யா என்கிற பெண்மணி மீது தகுந்த சட்ட மேல் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது