தமிழ்நாடு

செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை...!

Malaimurasu Seithigal TV

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

சட்டவிரோத பண பரிவர்த்தனை தடைச்சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில் இவரது ஜாமின் மனுவை மறுத்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் நவம்பர் 20-ம் தேதிக்கு தள்ளிவைத்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் பேலா எம்.திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.