தமிழ்நாடு

இன்று போல் தான் நாளையும்...வானிலை மையம் தகவல்!

Tamil Selvi Selvakumar

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று போல் நாளையும்:

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு மாமல்லபுரத்திற்கு அருகே கரையைக் கடந்தது. அது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து வடதமிழக பகுதிகளில் நிலவி வருகிறது.

இதன் காரணமாக ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும், இந்த கனமழையானது நாளையும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.