தமிழ்நாடு

சென்னையில் பரவலாக பெய்த மழை!

சென்னையில் மாநகர் பகுதிகளில் இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்தது.

Malaimurasu Seithigal TV

சென்னையில் மாநகர் பகுதிகளில் இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்தது.

சென்னையில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி சென்னை மாநகரின் சைதாப்பேட்டை, கிண்டி, அண்ணா சாலை, ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை போன்ற பகுதிகளிலும் வடசென்னையில் பெரம்பூர், கொளத்தூர், திருவெற்றியூர், ராயபுரம், காசிமேடு போன்ற பகுதிகளிலும் இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்தது.

அரை மணி நேரம் இடைவிடாமல் பெய்த மழையால் மாநகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் காலை வேலைக்கு சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.