தமிழ்நாடு

கோவையில் கொட்டித் தீர்த்த கன மழை....வாகன ஓட்டிகள் அவதி...

கோவையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கன மழையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

Malaimurasu Seithigal TV

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள மாவட்டங்களுக்கு மழை அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் கோவையில் திடீரென ஒரு மணி நேரத்துக்கும் மழை பெய்தது. சுமார் ஒரு மணி அளவில் திடீரென வானம் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்ட நிலையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

குறிப்பாக காந்திபுரம் சிவானந்தா காலனி வடகோவை, ஆர்எஸ் புரம், சிங்காநல்லூர், துடியலூர், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இடைவெளி இல்லாமல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மதிய நேரமான ஒரு மணி அளவிலேயே மாலை 6 மணி போன்று இருட்டாக காணப்பட்டது.

மழை அதிகரித்ததன் காரணமாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறே  பயணம் மேற்கொண்டனர். குறிப்பாக காந்திபுரம் சிவானந்தா காலனி போன்ற பகுதிகளில் வாகன நெரிசல் அதிகமாக காணப்பட்டதால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் மழையில் நனைந்தபடியே பயணம் மேற்கொண்டனர். மேலும் சாலை எங்கும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது காணப்பட்டது குறிப்பிடத்தக்கது