தமிழ்நாடு

துறையூர் பச்சை மலையில் கனமழை...! 3 கிராமங்கள் நீரில் தத்தளிப்பு...!

துறையூர் பச்சை மலையில் கனமழை.. 3 கிராமங்களில் வீட்டுக்குள் புகுந்த வெள்ள நீர்...! எம்எல்ஏ ஸ்டாலின் குமார் ஆய்வு ,!

Malaimurasu Seithigal TV

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த பச்சை மலையில், நேற்று இரவு பெய்த கன மழையின் காரணமாக செல்லிபாளையம் அருகே உள்ள குண்டாறுக்கு நீர் வரத்து அதிகமாகி கரை உடைந்து நீர், கிராமத்திற்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.இதன் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மேலும் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதால் பள்ளி மாணவர்கள், அலுவலக பணியாளர்கள் வெளியில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

பச்சை மலையில் அடிக்கடி மழை பொழிவதால் செல்லிப்பாளையம், மருவத்தூர், அம்மம்பாளையம் உள்ளிட்ட மூன்று கிராமங்களும் மலை அடிவாரப் பகுதி என்பதால் ஊருக்குள் மழை நீர் புகுந்து விடுகிறது. இதை சரி  செய்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வெள்ளம் பதித்த பகுதிகளை சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், துறையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணகுமார், ஊராட்சி மன்ற தலைவர் அரவிந்தன், தாசில்தார் புஷ்பராணி உள்ளிட்டோர் பார்வையிட்டு மழை சேதம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அதோடு பாதுகாப்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். மழை வெள்ளத்தின் காரணமாக சுமார் 200 வீடுகளில் நீர் புகுந்துள்ளது, மேலும் 200 ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.