தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் கூறியுள்ளது. 4 மற்றும் 5-ம் தேதிகளில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் வங்கக்கடல், தெற்கு அந்தமான் கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதி மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடைஇடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டுமென வானிலை மையம் எச்சரித்துள்ளது.