தமிழ்நாடு

இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...! சென்னை வானிலை மையம் தகவல்!!

Tamil Selvi Selvakumar

தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி:

குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வலுவிழக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:

இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும், சென்னையை பொறுத்தவரை இன்றும் நாளையும் லேசானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

தொடர்ந்து, தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் குமரிக்கடலில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீச வாய்ப்புள்ளதால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் தெரிவித்துள்ளது.