வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இன்று நீலகிரி , தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவில், சென்னையில், பரவலாக மழை பெய்தது. ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை, எழும்பூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.