தமிழ்நாடு

தீபாவளியை முன்னிட்டு கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை...!

Malaimurasu Seithigal TV

10,11,12 ஆகிய மூன்று நாட்களுக்கு சென்னை நகருக்குள் கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை ஒட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து மாற்றங்கள் குறித்து சென்னை போக்குவரத்துக் காவல் கூடுதல் ஆணையர் சுதாகர், வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் மற்றும் தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய சென்னை போக்குவரத்துக் காவல் கூடுதல் ஆணையர் சுதாகர், என்.எஸ்.சி போஸ் சாலை, தி.நகர், புரசைவாக்கம் ஆகிய இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் வாகனங்களை தொலைவாக நிறுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, கோயம்பேடு செல்லும் அனைத்து வாகனங்களும் மதுரவாயல் வழியாக செல்லும் என்றும், மேலும் சென்னையில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.