தமிழ்நாடு

எம்.ஆா்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனையுடன் முன் ஜாமின்!!

Malaimurasu Seithigal TV

விதிமுறைகளை மீறி தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் தமிழக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கரூர் வெங்கமேடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாக கூடியதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் விஏஓ சுரேஷ் அளித்த புகார் அளித்துள்ளார்.

சுரேஷ் அளித்த புகாரின் பெயரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மீது வெங்கமேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில்  முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். 

இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ்,  தேவைப்படும்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.