வாகை சூட்டுகிறாரா விஜய்? வாகை சூட்டுகிறாரா விஜய்?
தமிழ்நாடு

வரலாற்று சாதனை படைத்த தவெக! - வாகை சூடுவாரா தளபதி?

களமிறங்கிய முதல் தேர்தலிலேயே 30% வாக்குகளைக் கடந்து முன்னிலையில் உள்ளது தமிழக வெற்றிக் கழகம்.

Vinvizhi Leninton

மக்கள் மத்தியில் மிக முக்கியமான தேர்தலாக பார்க்கப்பட்டது 2026 சட்டமன்ற தேர்தல். தற்போது, இந்த தேர்தலின் வாக்கு என்ணிக்கை விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. திமுக பல இடங்களில் தோல்வி அடைந்திருக்கிறது. குறிப்பாக, திமுகவின் கோட்டையாக விளங்கிய கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டுள்ளார். மேலும் இவரைத் தொடர்ந்து திமுகவில் பல முக்கியப்புள்ளிகள் தவெக வேட்பாளர்களால் பல தொகுதிகளில் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். தற்போது தவெக தொடர்ந்து முன்னிலை வகித்துவருவதால் முதலமைச்சராவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், களமிறங்கிய முதல் தேர்தலிலேயே 30% வாக்குகள் பெற்று கிட்டத்தட்ட 1.48 கோடி வாக்குகளை பெற்று முதலிடத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இவரது வெற்றியை பல தவெக தொண்டர்களும் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

நடிகரும், அரசியல் கட்சியின் தலைவருமான விஜய்யின் தந்தை செய்தியாளர்களை சந்தித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். மேலும் தனது குடும்ப உறுப்பினர்களோடு சேர்ந்து எஸ். ஏ. சந்திரசேகர் கொண்டாடிய காணொளி இணையதளத்தில் கவனம் பெற்றது. அவரைத்தொடர்ந்து தவெகவின் முக்கிய பொறுப்பாளரான ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தனது வாழ்த்துக்களை தெரிவிக்க திரிஷா நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்துக்களை கூறினார். மேலும், திரை பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தங்களது சமூகவலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தற்போது தனது பனையூர் இல்லத்திலிருந்து லயோலா கல்லூரிக்கு சென்று தனது வெற்றி சான்றிதழை பெறவிருக்கிறார். இதற்காக அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், தனது பெற்றோரின் ஆசீரைப் பெறவிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்த வெற்றியினை விஜய்யின் ரசிகர்கள் முதல் தொண்டர்கள் வரை பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தும், கொண்டாட்டங்களை நிறைவேற்றியும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், தான் சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தலிலேயே தனித்து களம் கண்டு வெற்றிபெற்று வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.