தமிழ்நாடு

கோடை துவங்கியதும் களை கட்டும் ஒகேனக்கல்...

கோடை வெயில் துங்கும் நிலையில், சுற்றுலா தளமான ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

Malaimurasu Seithigal TV

தருமபுரி | ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் அருவியில் ஆயில் மசாஜ் செய்து, அருவியில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்வதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

தற்பொழுது கோடை காலம் தொடங்குவதால் இன்று ஞாயிறு விடுமுறையை கொண்டாடுவதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். ஒகேனக்கல் வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஆயில் மசாஜ் செய்தும், அருவியில் குளித்தும், பரிசல் பயணம் செய்தும் அருவியின் அழகை கண்டு ரசித்தனர்.

இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி, பரிசல் துறை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதியது. காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததாலும், கோடை வெப்பத்தை தணிக்க ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. மேலும் ஒருசில பரிசல்களில் பாதுகாப்பு உடை (லைஃப் ஜாக்கெட்) அணியாமல், ஆபத்தை உணராமல், பரிசல் பயணம் செல்கின்றனர்

இன்று சுற்றுலா பயணிகள் விடுமுறையை கொண்டாட குவிந்ததால், ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் களை கட்டியது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலாவை தொழிலை நம்பியுள்ள பரிசல் ஓட்டிகள், மசாஜ் மற்றும் சமையல் தொழிலாளர்கள் உள்ளிட்ட வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.