தமிழ்நாடு

கரூர் முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை...

முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ரெய்டு.

Malaimurasu Seithigal TV
தமிழகம் முழுவதும் முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான  சென்னை, கரூர் உட்பட தமிழகம் முழுவதும் அவரது வீடு, சாயப்பட்டறை, அடுக்குமாடி குடியிருப்பு என 21 இடங்களில் 200க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 
இதில் குறிப்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள சாய் கிருபா குடியிருப்பில் அமைந்துள்ள விஜயபாஸ்கருக்கு சொந்தமான இல்லத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்வேறு நிறுவனங்களிடமிருந்து பல கோடிகள் லஞ்சம் பெற்று முறைகேடாக கையொப்பம் வழங்கி அதன் மூலம் கோடிக்கணக்கில் சொத்துக்கள் சேர்த்து வைத்திருப்பதாக வந்த தொடர் புகாரின்பேரில் இந்த திடீர் சோதனை நடத்தப்படுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்படுகிறது. 
மேலும் இந்த சோதனையில் சில முக்கிய சொத்து ஆவணங்களும், தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி கையொப்பமிட்ட ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக  லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வட்டாரங்கள் தகவல் வெளியாகியுள்ளது. 
சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.