சென்னை மயிலாப்பூரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் ‘காதலுக்கு அரண் அமைப்போம் சாதிக்கு சவக்குழி செய்வோம்’ எனும் தலைப்பில் ஆணவக் கொலைகள் குற்றங்களுக்கு எதிரான சமூக நீதி கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாநில செயலாளர் பெ.சண்முகம், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு,எழுத்தாளர் ஜெயராணி,தோழர் தியாகு, ஊடகவியலாளர் கவிதா முரளிதரன், நடிகர் சத்யராஜ், இயக்குனர் அமீர், எவிடன்ஸ் அமைப்பில் கதிர், கௌசல்யா சங்கர் உள்ளிட்ட தலைவர்கள் செயல்பாட்டாளர்கள் எழுத்தாளர்கள் பங்கேற்று பேசினார்கள்...
கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் பேசுகையில்,
“தமிழ்நாட்டில் இன்று விவாதிக்கப்பட்டு கொண்டிருக்கிற மிக முக்கியமான பிரச்சனையை ஒட்டி இத்தகைய ஒருங்கிணைப்பை மேற்கொண்ட கவுசல்யா அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள் . மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொருத்தவரை 2015ஆம் ஆண்டு சட்டமன்ற குழு தலைவராக இருந்த சௌந்தரராஜன் அவர்கள் சாதி ஆணவக்கொலை தடுப்பு சட்டம் ஏற்ற வேண்டும் என தனி நபர் மசோதா கொண்டு வந்தார்.
சாதி ஆணவ கொலைகளுக்கு எதிராக களத்தில் நின்று வீரியமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் நடத்திக் கொண்டிருக்கிறது.
எங்களுடைய தோழர்கள் பல பிணவறைகளுக்கு முன்னால் பல நாட்கள் காத்திருக்கிறார்கள். அத்தகைய கொலைகள் நடந்ததற்கு பிறகு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக இத்தகைய கொலைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக எவிடன்ஸ் கதிர் போன்றவர்களை போல் எங்களுடைய தோழர்களும் பிணவரைக்கும் முன்னாள் நாங்கள் நின்று இருக்கிறோம் வருட கணக்கில் அந்த வழக்குகளை நடத்தி வருகிறோம்.
எந்த ஒரு சாதியும் மற்றொரு சாதியில் காதலித்தால் திருமணம் செய்தால் கொலைகள் நடந்து கொண்டிருக்கிறது தமிழ்நாட்டில் பட்டியல் சாதிகளுக்குள்ளும் கொலைகள் நடக்கிறது பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கும் கொலைகள் நடக்கிறது ஆணவக் கொலைகள் எல்லா சாதிகளிலும் நடக்கிறது.
கடந்த ஆறாம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நானும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக திருமாவளவன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக முத்தரசனும் இந்த ஒரு பிரச்சனைக்காகத்தான் வேறு எந்த விதமான கோரிக்கையும் அன்றைய தினம் எங்களிடம் இல்லை சாதி ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு ஒரு தனி சட்டம் ஏற்ற வேண்டும் என்கிற ஒற்றை கோரிக்கையோடு தான் மூன்று பேரும் சேர்ந்து முதலமைச்சர் அவர்களை சந்தித்தோம்.
ஒரு அரை மணி நேரத்திற்கு மேலாக ஏன் தனி சட்டம் வேண்டும் என எடுத்து கூறினோம். இருக்கின்ற சட்டங்கள் போதும் தனி சட்டம் தேவையில்லை என ஏற்கனவே முதலமைச்சர் அரசின் நிலைப்பாட்டை கூறியிருந்தார்.
சாதி ஆணவக் கொலைகளால் எந்தெந்த சாதிகள் பாதிக்கப்பட்டுள்ளது அதனால் வாக்கு வங்கி ஏதேனும் பாதிக்கப்படுமா இல்லை என தெரிவித்து அவரிடம் எடுத்துக் கூறினோம்.
அவரும் அதற்கு உடன்பாடான மனநிலைக்கு வந்ததாகத்தான் நாங்கள் பார்க்கிறோம்.
இந்த கருத்தரையின் வாயிலாக தமிழ்நாடு அரசை நாம் வற்புறுத்த விரும்புவது வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடர்களிலேயே சாதி ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான தனி சட்டத்தை ஏற்ற வேண்டும் அதற்கு தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகவும் தமிழ்நாடு முதலமைச்சரை நான் வேண்டிக் கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.
தனி சட்டம் ஏற்றுவதற்கான எல்லா விதமான நியாயங்களும் இருக்கின்றன.
சட்டம் வந்தாலும் இந்த பிரச்சனைகள் முற்றிலும் தீர்வதற்கு ஒரு சில கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம்.
உதாரணத்திற்கு சதி சமூகத்திற்கு ஒரு காலத்தில் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றாக இருந்தது பின்பு அதற்கு எதிராக சட்டம் வந்தது இந்தியாவில் சதி என்பது ஒழிக்கப்பட்டு விட்டது.
பட்டியல் இனத்து பெண்கள் நாடார் இனத்து பெண்கள் மார்பகங்களை வெளிப்படையாக தான் வைத்திருக்க வேண்டும் தோல் சீலை போட்டு மூடக்கூடாது என்கிற ஒரு சட்டம் இருந்தது.அதற்கு எதிராக நீடித்த போராட்டத்தை நடத்தி இன்றைக்கு எவராலும் போட்டு சொல்ல முடியாது சட்டத்தின் காரணமாக இப்படி பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன.
சாதி ஆணவக் கொலைகள் சட்டத்தின் மூலமாக கட்டாயம் நாம் உழைக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதற்கான தேவையை நாம் ஒன்று சேர்ந்து இருக்கக்கூடிய ஒற்றைக் கருத்துடைய நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டும்.
சட்டப்படி தனது இணை அறை தேர்வு செய்யக்கூடிய சுதந்திரத்தை இந்திய நாட்டின் அரசு அமைப்பு வழங்கி இருக்கிறது.
பெற்றோர்கள் கூட சாதி மாறி திருமணம் செய்யக்கூடாது குறிப்பிட்ட நபரை திருமணம் செய்யக்கூடாது என்று சொல்வதற்கு சட்டப்படி உரிமை கிடையாது. ஆனால் சட்டத்தை மதிப்பதில்லை என்பதில் தான் பிரச்சனை.
தாங்கள் பெற்று பாசமாக வளர்த்தோம் அன்பாக வளர்க்கும் என்றெல்லாம் சொல்லிவிட்டு காதலித்து திருமணம் செய்தால் கொலை செய்து விடுகிறார்கள்.
நான் எதனை வேண்டுமானாலும் இழப்பேன் பாசமாக வளர்த்த என் மகளை இழப்பேன், பாசமாக வளர்த்த என் மகனை இழப்பேன்… ஆனால், என்னுடைய சாதியை இழக்க மாட்டேன் என்கிற வெறி தான் இது போன்ற கொலைகள் நடப்பதற்கான அடிப்படை.
சாதி மறுப்பு திருமணங்கள் நடத்திக் கொள்வதற்கான இடங்கள் கூட இல்லை. திருநெல்வேலி கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அது போன்று ஒரு திருமணத்தை நடத்தினோம். காவல்துறை பாதுகாப்போடு நடத்தினோம். திருமணம் நடத்தி முடிப்பதற்குள் காவல் துறையே தகவல் சொல்லி சாதி அமைப்புகள் அலுவலகத்திற்கு வந்து விட்டார்கள். அதற்குள்ளே மாப்பிள்ளை பெண்ணிற்கு தாலி கட்டி விட்டார். தாலி கட்டிய பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் எங்களுடைய அலுவலகத்தை அடித்து உடைத்து விட்டார்கள்.
சாதி மறுப்பு திருமணங்கள் செய்வதற்கான இடமாக எங்களுடைய கட்சியின் மாவட்ட அலுவலகங்கள் ஒன்றிய அலுவலகங்கள் என இருக்கும் எங்களுடைய கட்சியின் அலுவலகங்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிப்பை வெளியிடுகிறேன்.
காதல் திருமணத்தை நடத்திக் கொள்வதற்கான இடம் அதற்கான பாதுகாப்பு எங்களைப் போன்றவர்கள் தலைமை தாங்கி நடத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அதனால் தைரியமாக காதலியுங்கள் காதலித்து விட்டு வாருங்கள் திருமணத்தை செய்து வைக்க நாங்க தயாராக இருக்கிறோம்.
எல்லா சாதியிலும் முற்போக்குவாதிகள் இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. சாதி இந்துக்கள் எல்லோரும் சாதிவாதிகள் என்கிற முடிவிற்கு வந்துவிடக் கூடாது. நாம் ஒன்று சேர்ந்தால் சாதி வெறிக்கு எதிராக ஒரு பெரும் படையை நாம் தமிழ்நாட்டில் ஒன்று திரட்ட முடியும்.
அதுபோன்ற நபர்களை அடையாளம் கண்டு சாதி வெறியர்களுக்கு எதிராக களத்தில் நிறுத்துவதற்கு மூலமாக ஒரு திட்டமிடுதலை நாம் செய்தாக வேண்டும்.
கவின் செல்வகணேஷ் கொலையை சேர்த்து திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு வருட காலத்தில் 240 கொலைகள் நடந்துள்ளது. அங்கே என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. எல்லோரும் வெறிபிடித்து திறிகிறார்களா? எனவும் தெரியவில்லை. இது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ள கொலைகள் மூடி மறைக்கப்பட்டவை எத்தனை என தெரியவில்லை.
240 கொலைகள் என்பதை எல்லாம் நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை கொலை வெறி பிடித்து அலைகிறார்களா என்கிற அளவிற்கு நிலைமை கை மீறி போய்விட்டது.
ஆகவே மிக அவசரமாகவும் அறிவுபூர்வமாகவும் இடைவிடாமல் இத்தகைய நாம் தலையிட வேண்டிய பிரச்சனையாக சாதி வெறிக்கு எதிராகவும் சாதிய ஆணவக் கொலைகளுக்கு எதிராகவும் அமைந்துள்ளது.
கவின் செல்வ கணேஷ் கொலைக்கு பிறகு தமிழ்நாட்டில் பல்வேறு நபர்கள் இயக்கங்கள் தனிப்பட்ட முறையில் சாதி ஆணவக் கொலை சட்டம் வேண்டும் என பேசிக்கொண்டு இருந்த நிலையில், தற்போது நம்மையெல்லாம் ஒன்றாக்கியுள்ளது சமூகத்தில் சாதியானவள் கொலை செய்ததாக ஒரு தனி சட்டம் வேண்டும் என்கிற மனநிலை வந்திருக்கிறது என கருதுகிறோம்.
சாதி ஆணவ கொலைகளுக்கு எதிராக சமூகத்தில் ஆதரவான கருத்துக்கள் வருவதை அரசாங்கம் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தனி சட்டத்தை இயற்ற வேண்டும் என்பதை முதலமைச்சரிடம் வற்புறுத்தினோம்.
எங்களைப் பொறுத்தவரை ஓட்டு கூட்டு என்பது பிரச்சனை கிடையாது கூட்டு சேர்ந்து 50 இடங்களில் நிற்கப் போவது கிடையாது.
ஓட்டு மனதில் வைத்துக் கொண்டு நிலைப்பாட்டை எடுப்பது கிடையாது. இதுதான் தமிழ்நாட்டின் ஆகப்பெரிய பிரச்சினை என்பதை உணர்ந்து தமிழ்நாட்டு மக்களை சாதி வெறி பிடியில் இருந்து விடுவிப்பது தமிழக மக்களை இத்தகைய ஆணவக் கொலைகளில் இருந்து விடுவிப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும்.
சாதி ஆணவக் கொலைகளை செய்யும் கொலைகாரர்களுக்கு கிடைக்கும் ஆதரவு என்பது குறிப்பாக யுவராஜுக்கு கிடைத்த ஆதரவு மோசமான ஒன்று. கொலைகாரனை கொண்டாடுகிறார்கள். கொலைகாரர்களை கொண்டாடுகிற ஒரு சமூகமாக குறிப்பிட்ட அந்த அந்தந்த சாதிகள் இருக்கிறது.அதனை எதிர்த்து நான் போராடிக் கொண்டிருக்கிறோம் இது எவ்வளவு பெரிய கடினமான வேலை.
ஊர் கூடி தேர் இழுப்போம் என்பதைப் போல சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனி சட்டத்தை ஏற்ற நாம் ஒன்று கூடி போராடுவோம்” என பேசியிருந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.