தமிழ்நாடு

ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியீடு...

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் விரைவில் வீடு திரும்புவர் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டபோது ரத்த நாள திசு அழிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து சிகிச்சைப்பெற்றால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், மருத்துவமனை ரஜினியின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், ரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக ரஜினிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் வேகமாக குணமடைந்து வருகிறார். ஒரு சில நாட்களில் மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.