தமிழ்நாடு

ஓசூர் : அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இடையே விளையாட்டுப்போட்டி..!

Malaimurasu Seithigal TV

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வடக்கு சரகதிற்கான விளையாட்டுப்போட்டி நடைபெற்றது , இந்த விளையாட்டுப் போட்டியில் 14 ,17 , 19 வயதிற்கு உட்பட்ட அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இடையே  நடைபெற்றது. இந்த போட்டியில் கேரம் விளையாட்டு மற்றும் பந்து வீசி எறிதல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

இதில் ஓசூர் சுற்றியுள்ள அரசு பள்ளி, தனியார் பள்ளி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இப்போட்டியினை ஒசூர் கல்வி மாவட்ட அலுவலர் தொடங்கி வைத்தார். இதில் வெற்றி பெற்ற புக்க சாகரம் அரசு பள்ளி,பாகலூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.