தமிழ்நாடு

எடப்பாடி எங்களை எப்படி புகழ முடியும்....

Malaimurasu Seithigal TV

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று  அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரை முருகன், எடப்பாடி பழனிசாமிக்கு ஆட்சி எப்படி நடத்த வேண்டும் என்பதே தெரியாது என குற்றம்சாட்டியுள்ளார்.  மேலும்,  எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி எனவும் எனவே அவர் எப்படி எங்களை புகழ்ந்து பேசுவார் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ஆட்சி எப்படி நடத்த வேண்டும் என்பது எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியாது என்பதை நாங்கள் சொல்லதேவையில்லை எனவும் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.  திமுக பொது செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத்ராட்சகன் ஆகியோர் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்ய சென்னை  விமான நிலையத்தில் இருந்து கோவைக்கு விமானத்தில் சென்றனர். 

அதற்கு முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது எனவும் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சி எனவும் எங்களை என்ன அவர் புகழ்ந்தா பேசுவார் எனவும் அப்படி தான் பேசியாக வேண்டும் எனவும் கூறியுள்ளார்.