தமிழ்நாடு

மாணவர்கள் போதை பொருட்கள் உபயோகிப்பதற்கு நான் எப்படி ? உயர்நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி கேள்வி?

ள்ளி மாணவர்கள் மது அருந்துவதற்கும், மது போதையில் ரகளை செய்வதற்கும் தான் எப்படி பொறுப்பேற்க முடியும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

Malaimurasu Seithigal TV

டாஸ்மாக் மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை தொடர்பாக தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட தமிழக பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் நிர்மல் குமாருக்கு தடை விதிக்ககோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து பேச நிர்மல் குமாருக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. 

இந்த வழக்கு  நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைக்காமல் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யப்படுவதாக வாதிட்டார். 

தமிழகத்தில் கஞ்சா , குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனைக்காக  எப்படி குறை சொல்ல முடியும் எனவும், அவர் முதலமைச்சரோ, உள்துறை அமைச்சரோ அல்ல எனவும் வாதிடப்பட்டது. 

துறை சார்ந்த விமர்சனங்களை  ஏற்றுக்கொள்ளலாம் எனவும், 
பள்ளி மாணவர்கள் மது அருந்துவதற்கும், மது போதையில் ரகளை செய்வதற்கும்  எப்படி பொறுப்பேற்க முடியும் எனவும், கடந்த ஆட்சியிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன என செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

அப்போது குறுக்கிட்ட நீதிபதி,  இந்த நிகழ்வுகளுக்கும்  பொறுப்பில்லை என மனுதாரர் செந்தில் பாலாஜி எப்படி கூற முடியும் என நீதிபதி கேள்வி எழுப்பினர். 

செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் நிறைவடையாததால் வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.