தமிழ்நாடு

தனியார் மருத்துவமனைகளுக்கு எவ்வளவு தடுப்பூசிகள் தேவை?

தனியார் மருத்துவனைகள் 25 சதவீத தடுப்பூசிகளை பெறுவதற்கான வழிகாட்டு  நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

தனியார் மருத்துவனைகள் 25 சதவீத தடுப்பூசிகளை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி  தனியார் மருத்துவமனைகள் தங்களுக்கு எவ்வளவு தடுப்பூசிகள் தேவை என்பதை சம்பந்தப்பட்ட மாவட்ட  தடுப்பூசி அலுவலருக்கு கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும் என்றும் மாவட்ட அலுவலர்கள் மருத்துவமனையின் தேவை குறித்தான பட்டியலை தயார் செய்து மாநில சுகாதாரத் துறையின் தடுப்பூசி ஒதுக்கீட்டு அதிகாரிக்கு பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும். அந்தப் பட்டியல் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று மத்திய அரசு அளிக்கும் தடுப்பூசிகள் மாநில, மாவட்ட அலுவலர் மூலம் தனியார் மருத்தவமனைகளுக்கு வழங்கப்படும் என தமிழக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

மாநில தடுப்பூசி அலுவலர் அளிக்கும் ஒதுக்கீடு அடிப்படையில் மாவட்ட தடுப்பூசி அலுவலர் தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசியை வழங்கி அந்த தகவலை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். 5 சதவீத ஜிஎஸ்டி தொகையுடன் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டுக்கு ரூ. 600, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ரூ.1200, டாக்டர் ரெட்டி நிறுவனத்தின் ஸ்புட்னிக் ரூ. 948 என  கட்டணம் செலுத்தி தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.