jagan-moorthy 
தமிழ்நாடு

“ஜெகன் மூர்த்திக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்லை” -சிறுவன் கடத்தல் விவகாரத்தில் தாய் பரபரப்பு…!

மேலும் நான் வேலையிலிருந்து வரும்போதுதான் எங்கள் கேசில் அவர் கைதானது தெரிய வந்தது. இன்று இல்லாவிட்டாலும் ...

Saleth stephi graph

திருவள்ளூர் மாவட்டம்  திருவாலங்காடு அருகே  களாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த யுவராஜா என்பவரின் மகன் தனுஷ்(23)  இவருக்கும் தேனி  மாவட்டத்தைச் சேர்ந்த விஜயா ஸ்ரீ (21) என்ற இளம் பெண்ணுடன் கடந்த மாதம் 15ம் தேதி காதல்  திருமணம் செய்துக் கொண்டு  தலைமறைவானதாக கூறப்படுகிறது.  இந்நிலையில்    களாம்பாக்காத்தில்  வீட்டில் இருந்த தனுஷ் தம்பி இந்திர சந்த்(16) என்ற சிறுவனை  காரில் வந்த கும்பல் கடத்திச் சென்றுள்ளனர். இது குறித்து  தனுஷ் தயார்  காவல்துறை கட்டுப்பாடு அறைக்கு தொடர்பு கொண்டு புகார் செய்தார்..  திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தேனி மாவட்டத்தைச் சேர்ந்த  வனராஜா(55), மணிகண்டன்(49), கணேசன்(47) ஆகிய 3 பேரை சில நாட்களுக்கு முன்பு கைது செய்து சிறையில் அடைத்தனர்.  இதற்கிடையில் சிறுவன் கடத்தல் சம்பவத்தில் எஸ் பி தலைமையிலான தனிப்படை போலீசார் மகேஸ்வரி என்ற பெண்ணை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக புரட்சி பாரதம் கட்சி தலைவரும் கே.வி குப்பம் எம்.எல்.ஏ -வுமான  பூவை ஜெகன் மூர்த்தி இந்த சம்பவத்தில் தலையிட்டு பேசியதாகவும், கடத்தலில் அவருக்கும் தொடர்பிருப்பதாகவும் கூறி அவரை கைது செய்தனர்.

சிறுவன் கடத்தலுக்கு ஆயுதப்படை ஏடிஜிபி -யான எச்.எம்.ஜெயராமின் காவல் வாகனம் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் கடத்தல் சம்பவம் தொடர்பாக திருவாலங்காடு போலீஸார் வழக்கு பதிவு செய்து, தொழிலதிபர் வனராஜ், அவரது உறவினர்கள் மணிகண்டன், கணேசன், மகேஸ்வரி, பூந்தமல்லி துத்தம்பாக்கம் வழக்கறிஞர் சரத்குமார் ஆகிய 5 பேரை கடந்த 13-ம் தேதி கைது செய்தனர்.

இதை தொடர்ந்து ஏடிஜிபி ஜெயராம் நீதிமன்ற வழக்கத்திலே கைது செய்யப்பட்டு, இன்று முழுவதும் அவருடன் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் தனுஷின் தயார் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்  “இரவில் பெண் வீட்டார் சமாதானம் பேச வேண்டும் என்று வந்தனர். அவர்களிடம் காலையில் பேசிக்கொள்ளலாம் என சொல்லிவிட்டேன், மீண்டும் வந்து பார்த்தபோது சிலர் காரில் என் மகனை ஏற்றி செல்வதாக கூறியவுடன் பதற்றத்தில்தான் நான் புகார் கொடுத்தேன்.”

அப்போது நிருபர் ஜெகன் மூர்த்தியின் ஆட்கள் யாரவது காரில் இருந்தார்களா எனக் கேள்வி எழுப்பினார், அதற்கு “நாங்கள் ஜெகன் மூர்த்தியை பார்க்கவே இல்லை. என் மகனும் எங்களிடம் அப்படி ஒன்றும்  கூறவில்லை. மேலும் நான் வேலையிலிருந்து வரும்போதுதான் எங்கள் கேசில் அவர் கைதானது தெரிய வந்தது. இன்று இல்லாவிட்டாலும் நாளை சம்மந்தி வீட்டில் சமாதானமாகி சென்று விடுவோம், இதெல்லாம் தேவை இல்லாத பிரச்னை. நான் FIR -இல் ஜெகன் மூர்த்தியின் பெயரை குறிப்பிடவே இல்லை” என் பேசியிருந்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.