தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கடன் தொல்லை காரணமாக கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் பேட்டை நாணயக்கார பகுதியை சோ்ந்த மோகன், அவரது மனைவி ஜெயசுதா ஆகியோர் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனா். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக போதிய வருமானம் இன்றி கடன்தொல்லையில் தவித்து வந்துள்ளார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் மோகன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கடனை திருப்பித்தர முடியமால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினா் உடலை கைப்பற்றி பிரேத பாிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.