தமிழ்நாடு

காதல் மனைவி இறந்ததால்...ரயில்முன் பாய்ந்து கணவர் தற்கொலை..!

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியில் மனைவி இறந்த துக்கத்தில் கணவனும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Selvi Selvakumar

கந்திலியை சேர்ந்த சங்கீதாவிற்கும், குனிச்சி பகுதியை சேர்ந்த  மேகநாதனுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கர்ப்பமாக இருந்த பெண்ணிற்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து பெங்களூரில் இருந்த அவரது கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திருப்பத்தூருக்கு வந்த அவர், மனைவி இறந்த சோகத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.