தமிழ்நாடு

” நான் மத வாதத்துக்கு தான் எதிரி” கோயில்கள் திருப்பணிக்கு நிதி கொடுத்தபின் முதலமைச்சர் பேச்சு

2500 கோயில்கள் திருப்பணிக்கு ரூ.50 கோடி நிதி வழங்கிய முதலமைச்சர்

Malaimurasu Seithigal TV

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

எல்லோருக்கும் எல்லாம் என்ற ஆட்சி என்னுடைய ஆட்சி. இந்த திராவிட மாடல் ஆட்சி. எங்களை மதத்தின் பெயரால் எதிரானவர் என்று கூறுகிறார். மத வாதத்துக்கு தான் எதிரி. மதத்துக்கு எதிரானவர்கள் இல்லை..

சட்டமன்ற அறிவிப்பில் இடம் பெறாத அறிவிப்பாக தற்போது இந்த நிதி கோயில்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சொன்னதை மட்டும் செய்யும் ஆட்சி மட்டும் இல்ல இது. இந்த ஆட்சி சொல்லாததையும் செய்யும் ஆட்சி.

கோயில்கள் கலை சின்னங்கள், பயன்பாட்டு சின்னங்களை கொண்டுள்ளன. நமது சிற்ப திறமை, கலை திறமையின் சாட்சி வெளிப்படுத்தும் இடமாக உள்ளத. அதனை பாதுகாக்க வேண்டும்.

கோயில்கள் சமத்துவம் உலவும் இடமாக இருக்க வேண்டும்.எந்த மனிதனையும் சாதியின் பெயரால் தள்ளி வைக்க கூடாது.

அதனால் தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று  கொண்டு வந்தோம்.
மனிதர்கள் மட்டும் இல்லை‌. கோயில்களிலும் பணக்கார கோயில் சிறுக்கோயில் என்று இல்லை. அனைத்தையும் ஒன்றுபோல் கருதி உதவி செய்வோம்.

மதம், சாதி, கோயில்களிலும் வேற்றுமை இந்த அரசுக்கு இல்லை‌.


உங்களின் பாராட்டு எங்களுக்கு தேவை. தொடர்ந்து, ஊக்கப்படுத்துங்கள். எங்களை ஏலம் பேசுவோருக்கு தெரியட்டும். விமர்சனம் செய்வோருக்கும் எங்களின் செயல் என்ன என்பது இப்போது தெரியட்டும். அதற்கு இந்த மேடையே சாட்சி. சான்றாகும்.

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வரை இந்த அரசு உழைக்கும்

 ‌‌என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.