தமிழ்நாடு

அமைச்சரானதால் என்னால் தொகுதிக்கு வரமுடியவில்லை - உதயநிதி

Malaimurasu Seithigal TV

கலைஞர் நூலகம் தொடக்க விழாவில் நடமாடும் நூலகம் திட்டத்தை தொடங்கிய பின் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

 எழுத்தாளர் இமயம்

எப்போ பாத்தாலும் எனக்கு ஒரு புத்தகம் எழுதி கொடுப்பார்  அந்த வசனத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று எப்போதும் கூறுவார்  எழுத்தாளர் இமயம் - உதயநிதி ஸ்டாலின் 

அண்ணா நூற்றாண்டு நூலகம்

கலைஞர் மிகப்பெரிய அண்ணா நூற்றாண்டு நூலகம் திறந்து வைத்தார் கடந்த ஆட்சியில் மிக மோசமாக இருந்துள்ளது ஆனால் இப்போது அது புதுப்பிக்கபட்டு சீரமைகபட்டிளது இந்த நடமாடும் நூலகம்  அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்  உங்கள் இல்லம் தேடி இந்த நடமாடும் புத்தகத்தை வழங்க உள்ளோம் இவைக்கு எந்த கட்டணமும் கிடையாது - உதயநிதி ஸ்டாலின் 

நடமாடும் நூலகம் - மன நிம்மதி

நான் தொகுதியில் பல திட்டங்களை செய்து கொடுத்து இருக்கிறேன் ஆனால் இந்த நடமாடும் நூலகம் தான் எனக்கு மன நிம்மதியை கொடுத்திருக்கிறது என்றும் அடிக்கடி நான் தொகுதிக்கு வந்து கொண்டு இருந்தேன் ஆனால் அமைச்சர் ஆன பொழுது பல்வேறு மாவட்டத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் உள்ளதால் என்னால் தொகுதிக்கு வர முடியவில்லை தொகையில் உள்ள பணிகளை மாவட்ட செயலாளர்கள் சிறப்பாக செய்து கொண்டு வருகின்றனர்