vijay  
தமிழ்நாடு

“நான் எப்போதும் மக்களுடன் தான் இருப்பேன்” விஜய் -ன் அடுத்த மூவ் என்ன!?

தவெக 1 கோடி உறுப்பினர்களை சேர்த்துள்ளது.தற்போது மேலும் 2 கோடி ..

Saleth stephi graph

2026 -ஆவது சட்டமன்ற தேர்தல் தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே சொல்லலாம். இந்த தேர்தல் களத்தில் புது வரவு என்றால் அது ‘தமிழக வெற்றி கழகம்’ தான். விஜய்யின் அரசியல் பிரவேசம், ஆதவ் அர்ஜுனா பிரஷாந்த் கிஷோர் ஆகியோரின் பங்களிப்பு என தமிழக வெற்றி கழகம் நல்ல ஒரு பப்ளிசிட்டி யோடே களம் காண உள்ளது.

சின்ன ரீவைண்ட்..!

விஜய் அரசியலில் குதிப்பார் என்று நினைத்தது இன்று நேற்றல்ல 2013 ஆம் ஆண்டு தலைவா படம் வெளியாகி “time to lead” என கேப்ஷன் வைத்து அதற்காக அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை கடுப்பேற்றி மன்னிப்பு கேட்ட விவகாரமெல்லாம் அவரின் அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தின. ஆனால் அவரோ “ஓடு மீன் ஓட உறுமீன் வருமென” காத்திருந்த கொக்குபோல  காத்திருந்து அரசியலில் குதித்துள்ளார்.

அரசியல் எதிரியாக திமுக -வையும் கொள்கை எதிரியாக பாஜகவையும் முன்னிருத்தி தன் அரசியல் பயணத்தை துவங்கியுள்ளார்.

அடுத்தடுத்து எழும் விமர்சனங்கள்!

அவரது அரசியல் பிரவேசம் உண்மையில் தமிழகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது.  இந்த சூழலில்தான் விஜய் தனது கடைசி படமான  ஜனநாயகன் படமவெளியாக உள்ளது இந்நிலையில்தான், அவரை தவெக தொண்டர்கள் JV  என அழைக்க தொடங்கினர், அது தற்போது சர்ச்சையாகி உள்ளது. JV -என்றால் ஜோசப் விஜய் என அர்த்தம், விஜய் ஒரு சாராராக இயங்குகிறாரா என்ற சர்ச்சை எழுந்த வண்ணம் இருந்தது. 

மேலும் விஜய் work from home அரசியல் செய்கிறார், என பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருந்தது.  சமீபத்தில் நடந்த அஜித் குமார் லாக் அப்  மணரத்தில் விஜய் எடுத்து முன்னெடுப்புகள் மிகவும் கவனிக்கப்பட்டது. 

ஏற்கனவே தவெக 1 கோடி உறுப்பினர்களை சேர்த்துள்ளது.தற்போது மேலும் 2 கோடி உறுப்பினர்களை, சேர்க்க முயற்சி செய்து வருகிறது.

இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள   தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்தில்  விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது,இதில் MY TVK என்னும் வாக்காளர் பட்டியலுடன் கூடிய புதிய செயலியை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தொடங்கி வைத்துள்ளார்.

இந்த கூட்டத்தில் இரண்டாவது மாநில மாநாடு சட்டசபை தேர்தல் தொடர்பான வியூகங்கள் அமைப்பது மற்றும் கட்சிகளின் அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து மாவட்ட செயலாளருடன் விஜய் ஆலோசனை நடத்தினார். மேலும் மாநாடுமுன்னேற்பாடுகள் மாநாட்டுக்குவருபவர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படது.

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் கட உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேக செயலியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.

விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. தேர்தல் சமயம் என்பதால் கட்சி பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். இந்த நிலையில்தான் “தவெக -வின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியின் அறிமுக விழாவில் அக்கட்சியின் தலைவர் பேசினார்,

“"தமிழக அரசியலில் 1967, 1977 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தலை போன்று 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலும் அமையப் போகிறது. இரு மாபெரும் தேர்தல்களிலும் தொடர் வெற்றி பெற்றவர்கள் அதிகார பலத்தை எதிர்த்துதான் புதிதாக வந்தவர்கள் வென்றார்கள்”ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு சென்று அனைத்து மக்களையும் சந்தித்துதான் அவர்கள் வெற்றி பெற்றார்கள். அண்ணா கூறியதை மீண்டும் சொல்ல விரும்புகிறேன், "மக்களிடம் செல், மக்களிடம் இருந்து கற்றுக்கொள், மக்களுடன் வாழ், மக்களுடன் சேர்ந்து திட்டமிடு" இதனை சரியாகச் செய்தால் போதும், வெற்றிப் பேரணியில் தமிழ்நாட்டின் கீழ் அனைத்து குடும்பத்தையும் உறுப்பினராக சேர்த்து நம்மால் வெற்றி பெற முடியும்.

இதன்பிறகு மதுரை மாநாடு, மக்கள் சந்திப்பு, பயணம் என தொடர்ந்து மக்களுடன்தான் இருக்கப் போகிறோம். நம்முடன் மக்கள் இருக்கிறார்கள். வெற்றி நிச்சயம்." எனத் தெரிவித்தார். இதன்பிறகு மதுரை மாநாடு, மக்கள் சந்திப்பு, பயணம் என தொடர்ந்து மக்களுடன்தான் இருக்கப் போகிறோம். நம்முடன் மக்கள் இருக்கிறார்கள். வெற்றி நிச்சயம்." எனத் தெரிவித்தார்.

தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கக்கூடிய ஒரு சூழலில் விஜய் தீவிரமாக உழைக்க துவங்கினால், நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்த இயலும், மேலும் திமுக சமீப காலமாக எதிர்மறையான  விமர்சனங்களை பெற்று வருகிறது, இன்னும் சொல்லப்போனால் இன்னும் கொஞ்சம் பலவீனமாக உள்ளது. மேலும் விஜயின் கூட்டணி குறித்தும் ஒரு தெளிவுக்கு வந்த பின்னர் இன்னும் அதன் நிலை குறித்து தெரியவரும், என அரசியல் ஆர்வலர்கள் சொல்கின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்