தமிழ்நாடு

ஆட்சியை கொடுத்தால் ஒரே இரவில் ஜேசிபியால் சுங்கச்சாவடிகளை அகற்றிவிடுவேன்: சீமான் ஆவேசம்...

சமூக நீதிக்காக பெரியார் மட்டுமே போராடினார் என்பதை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

Malaimurasu Seithigal TV

சமூகநீதி போராளி இரட்டைமலை சீனிவாசனின்  76 ம் ஆண்டு நினைவு நாளையொட்டி,  சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக கொண்டாடுவதை தாங்கள் ஏற்பதாகவும், ஆனால் சமூக நீதிக்காக பெரியார் மட்டுமே போராடினார் என்பதை தாம் ஏற்கவில்லை எனவும் கூறினார். 

தம்மிடம் ஆட்சியை கொடுத்தால், ஒரே இரவில் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கசாவடிகளையும் அகற்றி விடுவேன் எனவும் கூறிய அவர், பொதுத்துறை நிறுவனங்களை குத்தகைக்கு விடும் மத்திய அரசின் செயல் ஏற்புடையதல்ல எனவும் குறிப்பிட்டார். மேலும் ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்தவேண்டும் என்றும், 2 கட்டங்களாக நடத்துவதை தாங்கள் ஏற்கவில்லை எனவும் கூறினார்.