தமிழ்நாடு

முறைகேடு நடந்தால் அதற்கான பரிகாரத்தை துறை காணும் - சேகர் பாபு

Malaimurasu Seithigal TV


திமுக ஆட்சியில் தவறு முறைகேடு எங்கு நடந்தாலும்,  அதற்கான பரிகாரத்தை துறை காணும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு  தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்க்காக  சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தடைந்தார். அவரை மீனவர் நலன் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்  ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு கூறுகையில், சமயபுரம் கோவலில் முடி திருத்தம் செய்ய  கூடிய தொழிலாளர்கள் 4 பேர் பணி நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளனர்.

இது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு? அவர் கூறுகையில், திமுக ஆட்சியில் தவறு முறைகேடு எங்கு நடந்தாலும்,  அதற்கான பரிகாரத்தை துறை காணும் என கூறினார். உடன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.