Tamilisai soundar rajan 
தமிழ்நாடு

‘சி.பி.ஆர் -க்கு ஆதரவு தரவில்லை என்றால் உங்களுக்கு தமிழ் பற்றே இல்லைனு அர்த்தம்” - தமிழிசை பரபர!!

சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகத்தை சார்ந்தவர். தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பவர். கட்சி வேறுபாடு இல்லாமல் அனைவரும் ...

Saleth stephi graph

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தரவில்லை என்றால் திமுக அதன் கூட்டணி கட்சி தமிழ் பற்று வேஷம் கலைந்து விடும் அப்துல் கலாமிற்கு ஆதரவு தராமல் செய்த குற்றத்தை மீண்டும் செய்ய வேண்டாம்  என தமிழிசை சவுந்திரராஜன் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் முன் பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

மகிழ்வான தித்திப்பான டெல்லி பயணம். சி.பி.ராதாகிருஷ்ணன் துணை குடியரசு தலைவர் வேட்பாளராக அறிமுகப்படுத்தபப்ட்டு உள்ளார். வேட்பாளர் அல்ல. அவர் துணை குடியரசு தலைவர் தான். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மையான வாக்குகள் இருக்கிறது. 

சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகத்தை சார்ந்தவர். தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பவர். கட்சி வேறுபாடு இல்லாமல் அனைவரும் அவருக்கு ஆதரவு தர வேண்டும். அப்துல் கலாமிற்கு ஆதரவு தராமல் திமுக ம்ற்றும் கட்சிகள் மாபெரும் குற்றத்தை செய்தன. இந்த முறை அதுப்போல் செய்ய கூடாது. 

எனக்கு மீண்டும் ஆளுநர் ஆவது தித்திப்பான செய்தி கிடையாது. மக்களுடன் பணியாற்றுவது தான் தித்திப்பான செய்தி. 

சிபி ராதாகிருஷ்ணன் ஆர்.எஸ்.எஸ்.க்காரர். அவரை ஆதரிக்க மாட்டோம் என்று சொல்வது எப்படி என தெரியவில்லை. அவர் ஊழல்வாதி கிடையாது.ஆர்.எஸ்.எஸ்.க்காரர் தானே. அந்த அமைப்பு நல்ல வாழ்க்கை முறையை ஏற்பவர்கள். திமுகவில் 7 அமைச்சர்கள் மீது ஊழல் குற்ற்ச்சாட்டுகள் இருக்கிறது. 

சிபி ராதாகிஷணனை தமிழ்நாட்டை சார்ந்தவராக தமிழராக பார்க்கவில்லையா. அதனால் ஆதரவு தர வேண்டும். ஆதரவு கொடுக்கவில்லை என்றால் தமிழ் பற்று என்ற வேஷம் கலைந்து விடும்.

ஒரு தமிழரை நாங்க்ள் தான் முதலில் நிறுத்தி உள்ளோம். அதற்கு போட்டி பேசாமல் விதாண்ட வாதம் பேசாமல் தமிழ் ம்ண்ணை சேர்ந்தவருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். அது தான் திமுக செய்யும் கடமையாக இருக்கும். 

சிபி ராதாகிருஷ்ணன் நல்ல தலைவர். திறமையானவர். அரசியலமைப்பு சட்டம் தெரிந்தவர். 2 முறை எம்.பியாக இருந்து உள்ளர். ஆளுநராக இருந்து உள்ளார். இதை விட தகுதியானவர் யார் இருக்கிறார்கள். 

செல்வ பெருந்தகைக்கு என்ன பிரச்சனை. த்மிழை மதிக்க கற்று கொள்ளுங்க்ள். சிதம்பரம் என்ன செய்தார் என பட்டியலிட முடியுமா சென்னை, தூத்துக்குடி, திருச்சி விமான நிலையங்கள், பிரதம்ரால் விரிவுப்படுத்தப்ப்ட்டன. தூத்துக்குடி துறைமுகம் விரிவுப்படுத்தப்ப்ட்டதால் தான் கார் தொழிற்சாலை வந்தது. 

20 ஆண்டுகள் மத்தியில் காங்கிர்ஸ்- திமுக ஆட்சியில் இருந்த போது என்ன செய்தார்கள் என்று பட்டியலிட முடியுமா. மத்தியில் பா. ஜ.க். ஆட்சியில் தமிழ்கத்திற்கு ரூ.10 லட்சம் கோடி உள்கட்டமைப்பு வசதி செய்து தந்து உள்ளோம். சிபி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தரவில்லை என்றால் தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள். 

துணை குடியரசு தலைவரை சிந்திக்கும் போது தவெகவை பற்றி சிந்திக்க் வேண்டாம் என்று நினைக்கிறேன். 

கட்சி சார்புடையவராக இருந்தாலும் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்ப்ட்டதும் கட்சி சார்பில்லாதவராகி விடுவார். இவ்வாறு அவர் பேசினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.