Admin
தமிழ்நாடு

இது ஆரம்பம் தான், இந்த சிம்பொனி இசை உலகமெங்கும் கொண்டு செல்லப்படும்

82 வயசு ஆச்சு இனிமேல் என்ன செய்ய போகிறார் என நினைக்க வேண்டாம் எந்த விஷயத்திலும் நீங்கள் நினைக்ககூடிய அளவிற்கு நான் இல்லை என இசைஞானி இளையராஜா பேட்டி.

Anbarasan

சென்னை விமான நிலையத்தில் லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் செய்த பிறகு சென்னை வந்த இசைஞானி இளையராஜாவை தமிழக அரசு சார்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். ஏராளமான இளையராஜா ரசிகர்களும் விமான நிலையத்தில் இருந்து இளையராஜாவை ஆரவாரம் செய்து வரவேற்றனர். பாஜக மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன், விபி.துரைசாமி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வன்னியரசு உள்ளிட்டோரும் இசைஞானி இளையராஜாவை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

இளையராஜா எழுதிய சிம்பொனிக்கு வேலியன்ட் என பெயரிடப்பட்டது. இது லண்டனில் உள்ள ஈவென்டிம் அப்போலோ அரங்கில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 12.30 மணிக்கு அரங்கேற்றப்பட்டது.

ராயல் பிலோர்மோனிக் இசைக்குழுவுடன் சேர்ந்து அரங்கேற்றம் செய்யப்பட்ட இளையராஜாவின் வேலியண்ட் சிம்பொனி இசையைக் கேட்டு ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

இசைஞானி இளையராஜா சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் எனும் சாதனையை படைத்துள்ளார்.

வேலியன்ட் என்ற தலைப்பில் பாரம்பரிய சிம்பொனி இசையை 35 நாட்களில் எழுதி முடித்திருப்பதாக இளையராஜா கடந்த ஆண்டு அறிவித்தார். லண்டனில் மார்ச் 8-ம் தேதி அரங்கேற்றம் செய்ய உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு கூறினார். இந்நிலையில், கடந்த 6-ம் தேதி லண்டன் சென்ற இளையராஜா, இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 12.30 மணிக்கு அங்குள்ள ஈவென்டிம் அப்போலோ அரங்கில் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்தார். உலகின் மிகச் சிறந்த ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து அவர் இதை அரங்கேற்றினார்.

அவரது இசைக் குறிப்புக்களை நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பல்வேறு இசைக் கருவிகளில் ஒரே நேரத்தில் இசைத்தது பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. இசை ஜாம்பவான்கள் மொஸார்ட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி ஆகிய சிம்பொனி இசைக் கலைஞர்கள் வரிசையில் இளையராஜாவும் இணைந்துள்ளார்.

லண்டனில் இருந்து சிம்பொனி அரங்கேற்றம் முடிந்து சென்னை திரும்பிய இசைஞானி இளையராஜா விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர்

அனைவருக்கும் நன்றி மிகவும் மகிழ்வான இதயத்தோடு மலர்ந்த முகத்தோடு நீங்கள் என்னை வழியமைத்து வைத்ததே இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்த இறைவன் அருள் புரிந்தார்.

இது சாதாரண விஷயம் அல்ல மியூசிக்கை எழுதிவிடலாம் எழுதி கொடுத்தால் அவர்கள் வாசித்து விடலாம் ஆனால் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வகையில் வாசித்தால் எப்படி இருக்கும் நாம் எல்லோரும் பேசுகிற மாதிரி எல்லோருக்கும் ஒன்றும் புரியாத மாதிரி இருக்கும் அல்லவா

அங்கே சென்றதும் Rehearsal கலந்து கொள்ள நேரம் இருந்தது. அரங்கேற்றம் பொழுது எந்தவிதமான விதிமுறைகளுக்கு மீறி தவறு நடக்காமல் மிக்டெல் டாம் என்பவர் தலைமையில் 80 பேரும் இசை அமைத்தார்கள். இந்த சிம்போனி அரங்கேற்றத்தின் போது மூச்சு விடும் சத்தம் கூட கேட்காது அப்போது நமக்கு வயிற்றெல்லாம் கலக்கும். எல்லோருடைய கவனமும் அதன் மீதுதான் இருக்கும் ஒரு ஸ்வரம் வாசிக்கும் போது அந்த ஒரு ஸ்வரத்தை கையை காட்டி வாசிக்கும் போது எல்லோருடைய கவனமும் அந்த ஒரு நோட்டில் இருக்கும், அவர்கள் வாசிக்கும் போது கேட்கிறவர்கள் மூச்சு விட மறக்கும் அளவிற்கு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு ஸ்வரத்திற்கு இந்த கதி என்றால் சிம்பொனி முழுவதும் நான்கு பகுதிகளாக கொண்டது.

1st moment

2rd moment

3rd moment

4th moment உள்ளது.

வெஸ்டர்ன் மியூசிக்கலி சிம்பொனி வாசித்து முடியும் வரை யாரும் கைதட்ட மாட்டார்கள், கைதட்ட கூடாது அது விதிமுறை ஆனால் நமது ரசிகர்களும் அங்கு வந்திருந்த பொதுமக்களும் அனைவரும் 1st moment முடிந்ததும் கைதட்டினார்கள், வாசிப்பவர்களுக்கும் ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் திரும்பி என்னை பார்த்தார்கள் அவர்கள் அப்படித்தான் என சொல்லி சிரித்தேன்.

ஒவ்வொரு momentயும் கொட்டி தீர்த்தார்கள் இசையின் அமைப்பை கேட்டுவிட்டு தாங்க முடியவில்லை இன்னைக்கு அடித்தால் நாளைக்கா அழுவோம் அப்போது ரசித்ததை அப்போது நம் ஆட்கள் வெளிப்படுத்தி விடுவார்கள், அந்த நேரத்தில் ரசிப்பதே அவர்களுடைய மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது கரகோஷத்தின் மூலமாக வெளிப்படுத்தினர்.

இசை வல்லுனர்களாலும் பாராட்டப்பட்ட சிம்போனி தமிழ்நாட்டுக்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக பெரிய நிகழ்ச்சியாக மாற்றம் எடுத்திருப்பது இறைவனின் அருளால் தான் என தெரிவித்தார். முதலமைச்சர் அரசு மரியாதையோடு வரவேற்று இருப்பது எனக்கு நெஞ்சத்தை நெகிழ வைத்துள்ளது. தமிழக மக்கள் அனைவரும் என்னை வாழ்த்தி கொண்டிருப்பது வரவேற்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை இசையை டவுன்லோட் செய்து கேட்கக்கூடாது டவுன்லோட் என்பதை மட்டமாக நினைக்க வேண்டாம். நேரடியாக கேட்க வேண்டும் என்று மக்கள் முன்பாக நேரடியாக இசைத்து அந்த அனுபவத்தை அது வேறு மாதிரியான அனுபவம் கேட்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்த அரங்கேற்றத்தின் போது இரண்டாவது பகுதியில் நமது பாடல்களை அவர்களை வாசிக்க வைத்து அங்கே அவர்களுடன் பாடினேன் அது மிகவும் கஷ்டமான காரியம் அவர்களோடு பாடி எனக்கு பழக்கமில்லை தினமும் அவர்களுடோ பாடுகிறேன் என்னுடைய பாடல்களை என்னுடைய Studio எங்களுடைய விதிமுறைகள் படி வழக்கம் அவர்களுடைய பாடி மக்கள் கைதட்டி நல்ல வரவேற்பு கொடுத்தார்கள் என தெரிவித்தார்.

சிம்போனி இசையை 13 தேசங்களில் நடக்க இருப்பதற்கு நாட்கள் குறித்து விட்டது அக்டோபர் 6 ஆம் தேதி துபாயில் செப்டம்பர் 6 ஆம் தேதி பாரிசில் ஜெர்மனி எல்லா நாடுகளிலும் இந்த சிம்போனி இசை செல்ல இருக்கிறது.

தமிழர்கள் இல்லாத பகுதிகளுக்கும் இந்த இசை அரங்கேற்றப்பட உள்ளது.

நம்ம நாட்டில் நம்ம மக்களுக்கு கேட்க வைக்க வேண்டாமா, இசை உலகத்தில் இசை பாரம்பரியத்தில் மிகவும் உச்சகட்டம் மான விஷயம் அதனால் என்னுடைய மக்களை என் மீது அன்பும் வைத்துள்ளார்கள் தெய்வமாக கொண்டாடுகிறார்கள் இசை கடவுள் என்கிறார்கள் நான் சாதாரண மனிதனை போல தான் வேலை செய்து கொண்டிருக்கிறேன் தவிர என்னைப் பற்றி ஒரு எண்ணமும் கிடையாது.

என்னை இசை கடவுள் என சொல்லும் போது எனக்கு எப்படி தோன்றும் என்றால் இளையராஜா அளவிற்கு கடவுளை கீழே இறக்கி விட்டார்கள் என்னதான் தோணும்.

அனைவருக்கும் மிகவும் நன்றி இந்த இசை உலகம் எங்கும் கொண்டு செல்லப்படும் இதோடு நின்று விடப்போவதில்லை இது ஆரம்பம்தான், 82 வயசு ஆச்சு இனிமேல் என்ன செய்யப் போகிறார்கள் என்று நினைக்க வேண்டாம் நீங்கள் நினைக்கக் கூடிய அளவிற்கு நான் இல்லை எந்த விஷயத்திலும் நீங்கள் நினைக்கக்கூடிய நான் இல்லை என தெரிவித்தார்.

பண்ணைபுரத்தில் இருந்து புறப்படும் போது வெறும் காலோடு நடந்து என்னுடைய காலில் தான் நடந்து இந்த இடத்திற்கு என்னுடைய காலில் வந்து தான் நிற்கிறேன். இதை இளைஞர்கள் உணர வேண்டும் அவர்களும் வாழ்க்கையில் இதை முன் உதாரணமாக வைத்துக்கொண்டு அவர்கள் அவரது துறையில் மென்மேலும் வளர்ந்து நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதுதான் அறிவுரை என தெரிவித்தார்.

அனைவருக்கும் நன்றி என கூறி புறப்பட்டார். அப்போது செய்தியாளர்களை கேள்விகள் கேட்ட போது இவ்வளவு பேசிவிட்டேன் தொடர்ச்சியாக வேலை செய்துவிட்டு இடைவெளி இல்லாமல் பயணம் செய்து இங்கே வந்திருக்கிறேன் நான் விரிவாக பேசுகிறேன் முதலமைச்சர் விழாவாக எடுத்தால் என கூறி ஐயோ எப்படி சொல்வது என அமைச்சர் தங்கம் தென்னரசுவை பார்த்து சிரித்தவாறே பேசினார்.

இசைஞானி இளையராஜவை வரவேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது

தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்திய திருநாட்டிற்கு மட்டுமல்ல ஆசிய கண்டத்திற்கே மிகப்பெரிய பெருமையை தேடித் தந்து இன்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களின் சார்பாக தமிழ்நாடு அரசு இளையராஜாவை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்று உள்ளோம்.

இளையராஜாவை வரவேற்பதில் தமிழ்நாட்டு மக்கள் பெருமிதம் கொள்கிறார்கள்.

லண்டன் செல்வதற்கு முன்பு இளையராஜா அவர்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இன்று அரசின் சார்பில் இளையராஜா அவர்களை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்று உள்ளோம் என தெரிவித்தார்.

மிகப்பெரிய உலக சாதனையை நிகழ்த்தி நம்முடைய அடையாளமாக இளையராஜா திகழ்கிறார் என தெரிவித்தார்.

இசைஞானி இளையராஜாவை வரவேற்ற பிறகு பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது

பண்ணைபுரத்து நாயகன் இன்று பார்போற்றும் நாயகனாக மாறி இருக்கிறார். பிரதமரின் அன்பையும் மதிப்பையும் பெற்ற நமது உடன்பிறப்பு இளையராஜா அவர்கள் நமக்கெல்லாம் Pride of india வாக மாறி உள்ளார். இந்திய மக்களுக்கு எல்லாம் பெருமைகளை தேடி கொடுத்து இருக்கிறார் இளையராஜா என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இசையமைப்பாளர் தீனா

இசை கலைஞர்கள் மற்றும் இசை கலைஞர்களின் சங்கத்தின் சார்பாகவும் இசைஞானி இளையராஜா ஐயா அவர்களை வரவேற்கிறோம். இது மிகவும் மகிழ்ச்சியான தருணமாக உள்ளது என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர் இடம் பேசிய இயக்குநர் பேரரசு

இசைஞானி இளையராஜா இந்திய ராஜாவாக மாறி இருக்கிறார். தமிழ் மண்ணில் இருந்து சென்று உலக அளவில் பெறுமை சேர்த்து உள்ளார் என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விசிக துணைப்பொதுச்செயலாளர் வன்னியரசு பேசியதாவது

இசை அறிஞர் இசைஞானி அவர்கள் தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே பெருமை சேர்த்திருக்கிறார். எல்லோருடைய சோகங்களையும், துயரங்களையும் பாடல்கள் மூலமாக குறைத்துக் கொண்டிருக்க கூடிய இசைஞானி பல்லாண்டு வாழ்க வாழ்த்துகிறோம் என தெரிவித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்