தமிழ்நாடு

15 நாட்களில் தமிழகத்தில் கொரோனா இல்லை என்ற நிலை உருவாகும் - அமைச்சர் பெரிய கருப்பன்

இன்னும் 15 நாட்களில் தமிழகத்தில் கொரோனா இல்லை என்ற நிலை உருவாகும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த முதலமைச்சர் சிறப்பு கவனம் செலுத்த உத்தர விட்டுள்ளதாக கூறினார். மேலும் மக்கள் அதிகமாக கூடுவதால்தான் கொரோனா தொற்று பரவுவதாகவும், இதனை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.