தமிழ்நாடு

பிரதமர் நிகழ்ச்சியில்...! பெண்களை கிண்டல் செய்ததாக பாஜகவினர் கைது...!!

Malaimurasu Seithigal TV

பல்லாவரத்தில் பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியின் போது மதுபோதையில் பிஜேபியை சேர்ந்த வாலிபர்கள்  பெண்களை கிண்டல் செய்ததாக கைது செய்யபட்டதால் காவல் நிலையத்தை பிஜேபி யினர் முற்றுகையிட்டு காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்  பரபரப்பு.

பல்லாவரத்தில் உள்ள  இங்கிலீஷ் எலக்ட்ரிக்கல் கம்பெனி மைதானத்தில் நேற்று பல்வேறு மத்திய அரசு திட்டத்தை பிரதமர் மோடி  தொடங்கி வைத்தார். இந்நிலையில் பிரதமர் அங்கிருந்து சென்ற பின்னர் மது போதையில் இருந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த  பாஜக வாலிபர்கள் மூன்று பேர் அங்கிருந்த பெண்களை கிண்டல் செய்ததாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களைப் பிடித்து பல்லாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்த தகவல் அறிந்து பல்லாவரம் காவல் நிலையத்தை 100க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் முற்றுகையிட்டு வாலிபர்களை கைது செய்ததற்கு உரிய காரணம் இல்லை எனவும் விசரானை என்ற பெயரில் போலீசார் தாக்கியதாகவும் காவல் நிலையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்,

தகவல் அறிந்து  வந்த தாம்பரம் துணை ஆணையர் அதிவீர பாண்டியனை சுற்றி வளைத்த பாஜக நிர்வாகிகள், அவரிடமும் போலீசார் வாலிபர்களை தாக்கியது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 இதனால் ஆத்திரம் அடைந்த துணை ஆணையர் அதிவீரபாண்டியன் காவல் நிலையத்தில் உள்ள அனைத்து போலீசாரும் வெளியேறும்படியும் தானே விசாரனை செய்வதாக கடுமையாக கடிந்து கொண்டார் இதனால் காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மூன்று பாஜக வாலிபர்களையும் துணை ஆணையர் விடுவித்தார்.