தமிழ்நாடு

வெகு விமரிசையாக நடைபெற்ற ராஜராஜ சோழன் சதயவிழா...!

Tamil Selvi Selvakumar

தஞ்சை பெரிய கோயிலை எழுப்பிய மாமன்னன் ராஜராஜ சோழனின் ஆயிரத்து 38 ஆம் ஆண்டு சதயவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

சதயவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், பெரிய கோவில் வெளியே உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இவ்விழாவில், சதய விழா குழு தலைவர், தருமபுர ஆதீனம், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ராஜராஜ சோழன் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

நிகழ்ச்சியின் ஒருபகுதியாக ராஜராஜ சோழன் மீட்டெடுத்த தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறை நூல்களை, யானை மீது வைத்து ஓதுவார்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

சதய விழாவை ஒட்டி, பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு 48 வகையான திரவியங்களைக் கொண்டு சிறப்பு நீராட்டு நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.