தமிழ்நாடு

தாயுடன் தகாத உறவு; மகளுடன் உல்லாசம்...! வெட்டவெளிச்சமானது இளைஞரின் மன்மதலீலை...!

Malaimurasu Seithigal TV

சேலத்தில் தாயை இரண்டாவதாக திருமணம் செய்ததோடு, அவரது 16 வயது மகளையும் மயக்கி உல்லாசம் அனுபவித்து வந்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். 

சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை வாலிபர் ஒருவர் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதாக மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் வந்தது. புகாரின் பேரில் கன்னியாகுமரி மாவட்டம் இருளபுரம் பகுதியைச் சேர்ந்த விஸ்வா என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் வெளிவந்த தகவல்கள் போலீசாரையே அதிர்ந்து போக வைத்தது. ஏனெனில் அந்த வாலிபர் சிறுமி தவிர மேலும் பல பெண்களை மயக்கி உல்லாசம் அனுபவித்தது தெரிய வந்தது.

விஷ்வா கடந்த ஆண்டு கிருஷ்ணகிரியில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் வேலை பார்த்துள்ளார். அப்போது அந்த கடையில் வேலை செய்த சாம்பல்பட்டி பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி உள்ளது. பின்னர் ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணுடன் விஸ்வா பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளார். மேலும் அப்பெண்ணை திருமணமும் செய்துள்ளார்.

இந்த நிலையில் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு விஸ்வா அவரைப் பிரிந்து கிருஷ்ணகிரியில் உள்ள ஜூஸ் கடை ஒன்றை வேலைக்குச் சேர்த்துள்ளார். அப்போது அந்தப் பகுதியில் கணவரைப் பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த 25 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து அந்த பெண்ணையும் தனது வலையில் வீழ்த்தி பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளார். பின்னர் அந்தப் பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு குழந்தைகளுடன் சேலம் அம்மாபேட்டை பகுதியில் வீடு எடுத்து குடும்பம் நடத்தியுள்ளார். அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த 40 வயது பெண்ணுடன் விஸ்வாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் அந்த பெண்ணையும் தனது வலையில் வீழ்த்தி உல்லாசம் அனுபவித்துள்ளார். இந்த தகவல் இரண்டாவது மனைவிக்கு தெரியவே தன்னை விலக்கி வைத்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் அந்த பெண்ணையும் தன்னோடு சேர்ந்து ஒன்றாக வாழ முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து இரண்டாவது மனைவி பக்கத்து வீட்டைச் சேர்ந்த 40 வயது பெண் மற்றும் அவரது 16 வயது மகள் என அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்துள்ளனர். இந்த நிலையில் 2 பெண்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் 40 வயது பெண்ணையும் அவரது 16 வயது மகளையும் 2 தெரு தள்ளி தனியாக ஒரு வீட்டில் விஸ்வா குடித்தனம் வைத்து அங்கு அடிக்கடி சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

அப்போது விஷ்வாவுக்கு 16 வயது சிறுமியின் மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இதனால் தாய்க்கு தெரியாமலேயே சிறுமியை ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமாகி உள்ளார். இதை அறிந்த சிறுமியின் தாய் அம்மாபேட்டை காவல்நிலையத்தில் அளித்த புகாரில் விஸ்வா போலீசில் சிக்கியுள்ளார்.

இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் விஸ்வாவை கைது செய்து, இவர்கள் 4 பேர் தவிர வேறு பெண்களுடன் அவருக்கு உறவு உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.