தமிழ்நாடு

ரூ.24.92 கோடியில் புதுப்பிக்கப்பட்ட குடிநீர் வழங்கல் வாரியத்தின் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்!

Tamil Selvi Selvakumar

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் புதுப்பிக்கப்பட்ட கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  


சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியத்தின் தலைமை அலுவலகம் 24 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டது. இதேபோன்று, ஒரு கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் புதுப்பிக்கப்பட்டது.  பணிகள் நிறைவடைந்த நிலையில், புதுப்பிக்கப்பட்ட கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

தொடர்ந்து கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்த அவர்,  புகார் சேவை மையத்தையும் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு,  சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் சென்னை மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.