தமிழ்நாடு

அசோக் ரெசிடன்சியுடன் ரேடியன்சிலும் தொடரும் வருமான வரி சோதனை.......

Malaimurasu Seithigal TV

தமிழ்நாடு உட்பட பல்வேறு இடங்களில் வரி ஏய்ப்பு நிகழ்ந்ததாக வந்த புகாரை அடுத்து வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். 

வருமான வரி சோதனை:

தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அசோக் ரெசிடென்சிக்கு சொந்தமான ஹோட்டல்கள், அலுவலகங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அசோக்கின் வீடு உள்ள அண்ணாநகரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்து இடங்களிலும்:

இதே போல் கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள பனையூரில் ஆதித்யா ராம் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அலுவலகத்தில்  3 கார்களில் சென்ற 15க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். 

வருண் மணியன் வீட்டிலும்:

இதனைதொடர்ந்து ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ரேடியன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் வருண் மணியன் வீட்டிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

சோதனை:

இதே போல் ஐயப்பன்தாங்கல் மற்றும் போரூரிலுள்ள அசோக் ரெசிடென்சி விடுதியில், இரண்டு கார்களில் வந்த 14 வருமான வரித்துறை அதிகாரிகள் கம்ப்யூட்டர்கள், அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும் சோதனை செய்துள்ளனர்.

வேலூரில்..:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகை கடை பஜார், சந்தைபேட்டை பகுதிகளில் உள்ள அம்பாலால் குழுமத்திற்கு சொந்தமான கடை, வீடு, அலுவலகம் ஆகிய பகுதிகளிலும், வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள வீட்டு உபயோக பொருட்கள் கடையிலும், வேலூர் ஓல்ட் பைபாஸ் சாலையில் உள்ள அம்பலால் குழுமத்திற்கு சொந்தமான விஐபி சிட்டி அலுவலகத்திலும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது.