தமிழ்நாடு

சாரதா மோட்டார்ஸ் நிறுவனங்களில் வருமான வரி துறையினர் அதிரடி சோதனை...!

Tamil Selvi Selvakumar

சாரதா மோட்டார்ஸ் நிறுவனங்களுக்கு சொந்தமான அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 


டெல்லியை தலைமையிடமாக கொண்டு சாரதா மோட்டார்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சென்னை காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இந்நிறுவனத்தின் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. கார் மற்றும் கனரக வாகனங்களின் உதிரி பாகங்களை தயாரிக்கும் இந்த நிறுவனம், வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் இருங்காட்டுக் கோட்டை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள சாரதா மோட்டார்ஸ் நிறுனத்திற்கு சொந்தமான அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் அதிகாரிகள் சோதனை  நடத்தி வருகின்றனர்.

மேலும் சாரதா மோட்டார் நிறுவன பங்குதாரரான கிருஷ்ணகுமார் சர்மா என்பவர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் சொத்து மதிப்பு மற்றும் வரி ஏய்ப்பு குறித்த தகவல்கள் வெளிவரும் என தெரிகிறது.