தமிழ்நாடு

தமிழகத்தில் மறுபடியும் ஊரடங்கா...?  4-வது நாளாக அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு...

தமிழகத்தில் தற்போது 20 ஆயிரத்து 524 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV
சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் நேற்று ஆயிரத்து 990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 61 ஆயிரத்து 587 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால், நேற்று ஒரு நாளில் மட்டும்  26 பேர் உயிரிழந்ததனர்.
இதையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 102 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் நேற்று ஒரே நாளில், இரண்டாயிரத்து 156 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து ஆறாயிரத்து 961 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 20 ஆயிரத்து 524 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தமிழக  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு, அதிகபட்சமாக கோவையில் 230 பேருக்கும், ஈரோட்டில் 180 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் புதிதாக 175 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.