தமிழ்நாடு

”தமிழ் நிலத்தில் இருந்துதான் இந்திய வரலாறு தொடக்கம்” முதலமைச்சர் பெருமிதம்!

Tamil Selvi Selvakumar

இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ் நிலத்தில் இருந்துதான் தொடங்குகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.


வட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவையின் 36வது மாநாட்டில் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், மொழியை பெயராக வைப்பதில் தமிழர்கள் முன்னோடிகள் எனவும், நம்மைப் பொறுத்தவரை தமிழ்மொழி எழுத்தாக இல்லாமல் ரத்தமாக இருப்பதாகவும் கூறினார். இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ் நிலத்தில் இருந்துதான் தொடங்குகிறது எனவும் பெருமிதம் தெரிவித்தார்.

ஆறாம் நூற்றாண்டிலேயே மேம்பட்ட சமூகமாக நாம் விளங்கினோம் என்பதை கீழடி அகழாய்வு காட்டியுள்ளது எனக் குறிப்பிட்ட அவர், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக கல்வெட்டுகள் கண்டெடுக்கப் பட்டுள்ளதாகவும் கூறினார். அகழாய்வில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளுக்கு உலகளவில் அங்கீகாரம் பெற, அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் முதலமைச்சர் உறுதியளித்தார்.