தமிழ்நாடு

ஜெய்பீம் பட பாணியில் பொய் வழக்குப் போட்டு துன்புறுத்துவதாக பழங்குடியின மக்கள் புகார்!

பொய் வழக்குப்போட்டு போலீசார் எங்களை துன்புறுத்துவதாக பழங்குடியின மக்கள் புகார் அளித்துள்ளனர்.

Tamil Selvi Selvakumar

ஜெய்பீம் பட பாணியில் பொய்யான திருட்டு வழக்குப் போட்டு பழங்குடியின மக்களை போலீசார் துன்புறுத்துவதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், புலிவாந்தல் கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட பழங்குடியின வகுப்பை சேர்ந்த ராஜகிளி, கார்த்திக் ஆகிய இருவரை நள்ளிரவில் போலீசார்  கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ராஜகிளியின் மனைவி சங்கீதா மற்றும் அவரது உறவினர்கள், காவல் நிலையம் சென்று கேட்டபோது, யாரையும் அழைத்துவரவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, திருட்டு வழக்கு போட்டு கைது செய்யும் போலீசாரின் நடவடிக்கையை தடுக்கக் கோரி, காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பழங்குடி இன மக்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர்  புகார் மனு அளித்தனர்.