தமிழ்நாடு

நீதிபதியாக பதவியேற்க தகுதியற்றவர் விக்டோரியா - வைகோ விமர்சனம்!

Tamil Selvi Selvakumar

நீதிபதியாக பதவியேற்கத் தகுதியற்றவர் விக்டோரியா கவுரி என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கவுரி பொறுப்பேற்றுள்ளார். 

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற விக்டோரியா கவுரி தகுதியற்றவர் என்று விமர்சித்தார்.

தொடர்ந்து கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களை அவதூறாக பேசிய விக்டோரியா கவுரியின் நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிர்கட்சிகள் சார்பில் கடிதம் எழுதியுள்ளதாகவும் வைகோ கூறியுள்ளார்.