தமிழ்நாடு

பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப...தர்ணாவில் இறங்கிய கல்லூரி மாணவர்கள்!

Tamil Selvi Selvakumar

புதுக்கோட்டை அருகே உள்ள அரசுக் கலை கல்லூரியில் காலி பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலிய உள்ள பேராசிரியர் பணியிடங்கள்:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அடுத்த மருதன்கோன்விடுதியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் பேராசிரியர் பணியிடங்கள் அதிக அளவில் காலியாக உள்ளதாக கூறப்படுகிறது.

மாணவர்கள் தர்ணா போராட்டம்:

இந்நிலையில், புதிதாக பேராசிரியர்களை நியமிக்க வலியுறுத்தியும், கல்லூரியில் உள்ள ஆய்வகத்தை முறையாக பராமரிக்க வலியுறுத்தியும்  300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி நுழைவு வாயில் முன்பு சாலையில் அமர்ந்து அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.